பக்கம்:மலர் மணம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மலர்

ஆளுல் என் கிலேமை இத்தகையதன்று. நானும் அல்லியும் பச்சை எதிரிகளாகவே பன்னுட்களாக வளர்ந்து வந்தோம். இருவரும் ஒரே ஊரினர். அடுத் தடுத்த தெருவினர். இளம் பருவத்திலிருந்தே நான் அவள் வீட்டுக்குச் சென்றாலுஞ்சரி, அல்லது அவள் எங்கள் வீட்டுக்கு வந்தாலுஞ்சரி, இருவரும் எதிலும் போட்டி போடுவோம். விளையாட்டுப் பொம்மைகளை நான் இழுக்க அவள் இழுக்கப் பொம்மை இரண்டாதி விடும். நான் அவளை அடிக்கடி அடித்து விடுவேன். அவள் என்னே வைதுவிடுவாள். எங்கள் சண்டையை விலக்கி விடத்தான் பெரியவர்களுக்குச் சரியாயிருக்கும்; போதும் போதும் என்றாகிவிடும்.

நாங்கள் ஓரளவு வளர்ந்தவர்களாகியும் இதே நிலைமைதான் நீடித்தது. அல்லி வயதுக்கு வரும் பருவம் நெருங்கியிருந்தாள். நான் ஒரு நாள் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். விளையாட்டாகப் பேச்சுத் தொடங் கினுேம். விளையாட்டு வினையாயிற்று. பேச்சு சூடு பிடித்தது. வழக்கம்போல் என் கையும் சூடு பிடித்தது. அவள் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டேன். அவள் ‘ஓ’ என்று அலறியழுதாள். இவையெல்லாம் படிப்பவர் களுக்குச் சிறிதும் சுவைக்கா. என் அன்பே அழகே! கண்ணே பொன்னே 1 என்று நாங்கள் கொஞ்சி ளுேம்என்று எழுதிலைல்லவா படிப்பதற்குச் சுவைக்கும்? அதற்கு நான் என்ன செய்வது ! நடந்ததைத்தானே எழுத முடியும்?

அல்லியின் அலறலைக் கேட்ட அவள் தந்தை

ஓடிவந்தார். அவள் நடந்ததை அப்படியே சொல்லி விட்டாள். சொல்லவேண்டாம் என்று நான் அவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/18&oldid=656187" இலிருந்து மீள்விக்கப்பட்டது