பக்கம்:மலர் மணம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 191

செய்தேன். திருமணக் கூட்டத்தில் இச்செய்தியைத் தெரிவித்தால் அனைவரும் கை தட்டுவார்கள். அப்பா வின் பெருமிதத்தை அப்பொழுது பார்க்கவேண்டுமே ! எல்லாச் செல்வர்களுமே இவ்வாறு நல்லதற்குச் செய் தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்!

நான் இதற்குமுன்பு என் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டிருக்கிறேன். திருமணங்ாள் அன்று புதுப்பெண் நம் பக்கத்தில் வந்து அமருவாள்முதல் முதல் நாம் அவளேப் பார்த்துப் பூரித்துப் போவோம்-அவளது அழகை அப்படியே அள்ளி அள்ளிப் பருகுவோம்-அவள் தலையொடித்துக் கண் சாய்த்துப் பார்ப்பாள்-நாம் அப்படியே சொக்கி விடுவோம்-என் றெல்லாம் எவ்வளவோ பகற்கனவுகள் கண்டிருக்கிறேன். ஆல்ை, அந்த இன்பத்துக்கு இப்போது இடமில்லாது போய்விட்டதே என்று ஏங்கினேன். ஏன் ? எனக்கு வாய்த்துள்ள மணப்பெண்ணுே, என் அத்தை மகள் அல்லி-இதற்கு முன்பே நன்கு பழக்கப்பட்டவள்அவள் மணக்கோலத்தில் வந்து எவ்வாறு மனங்கவரப் போகிருள் ? பழக்கப்பட்ட சுவையாயிற்றே !-என்று சலித்துக்கொண்டே மணவறையில் அமர்ந்திருந்தேன்.

மணமகளே நன்கு அணி செய்து-அலங்கரித்து என் பக்கத்தில் அமர்த்தினர்கள். என் கனவு வீண்போக வில்லை. நான் பெண்ணே ஏறிட்டு நோக்கினேன். திடுக் கிட்டேன். அவள் அல்லி அல்லள்-எங்கள் அல்லி இவ் வளவு அழகாக இருக்கமாட்டாள்-அல்லியின் கண்நோக் கும் புன்மூரலும் இவ்வளவு நயமாக இருந்ததில்லே. இவள் யாரோ ? உற்று நோக்கினேன். அல்லிதான் !

ஆனல் அந்த அல்லி வேறு-இந்த அல்லி வேறு ! இளமைதொட்டு என்னுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/193&oldid=656202" இலிருந்து மீள்விக்கப்பட்டது