பக்கம்:மலர் மணம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 193

நூல் இங்கே நினைவிற்கு வருகிறது. ஐரோப்பியப் போர் ஒன்றில் காயம்பட்ட வீரர்களுக்கு அரும்பெருந் தொண் டாற்றிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்னும் பெண்மணியின் வரலாற்றைக் கூறும் நூல் அது. அந்நூலில் ஒரு காட்சி: நைட்டிங்கேலும் அவள் காதலன்-ஃஎன்றி ட்ரமாயின் (Henry Tremayne) என்பவனும் ஒரு நீர் ஊற்றின்முன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ‘நீ என்னை மணந்துகொள்ள மாட்டாயா ?” என்று காதலன் கேட்கிருன். ‘ திரு. மணம் என்பது அடிமை வாணிகச் சந்தையில் செய்யும் ஒருவகைக் கொள்முதல் அல்லவா ?” என்று காதலி கேட்கிருள். ‘திருமணம் செய்துகொண்ட பின்புதான், பெண்கள் இந்த உலகில் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளேயும் பெறமுடியும் ” என்று காதலன் சொல்லு கிருன். ‘ உரிமை (சுதந்திரம்) நீங்கலாக, வேறு எதனை யும் பெறமுடியும் அல்லவா ?” என்று காதலி குத்தலாகக் கேட்கிருள். அவள் கருத்தை அவன் மறுக்கிருன்-என் நினைவிற்கு வந்தது இந்தக் காட்சிதான்.

என்னேக் கேட்டால்-நானும் ட்ரமாயின் பக் கத்தைச் சேர்ந்தவன்தான். ‘ திருமணம் ஆவதற்குமுன் ஆண்கள் உரிமையுடன் இருக்கிறார்கள்-ஆனபின் உரிமையிழந்து விடுகிறார்கள். பெண்களோ, திருமணத் திற்குமுன் உரிமையின்றிக் கிடக்கிறார்கள்-ஆனபின்போ, உரிமைபெற்று விடுகிறார்கள்”-எ ன் ப து எனது சொந்தக் கருத்து. அந்த ஆங்கில நூலில், ட்ரமாயின் சொல்வதாக, நூலாசிரியர் ரெஜினல்டு பெர்கெலி’ (Reginald Berkeley) 6T63rl Jolf GTopoff 60615;&#65’s பதைப் படித்த தல்ை நான் இந்த முடிவுக்கு வரவில்லை. எனது சொந்த முடிவுக்கு ஒத்திருந்த தல்ை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/195&oldid=656204" இலிருந்து மீள்விக்கப்பட்டது