பக்கம்:மலர் மணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 199

பெற்றாேர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவர். முதல் பிள்ளைப் பேறு தாய் வீட்டில்தான். குழந்தை பிறந்து மூன்று மாதமோ அல்லது ஐந்து மாதமோ ஆகும் போதுதான் நாங்கள் தாயையும் சேயையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வருவோம். எனவே, இப்போது எங்கள் பேச்சு நீள்வதில் வியப்பில்லேயே !

“ நாளே மாலே அப்பா என்னே வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது நீங்களும் வருவீர்கள் அல்லவா அத் தான் ? அப்பா உங்களையும்தானே அழைப்பார் ? ”

என்னே ஏன் அழைக்கிறார் ? நான் கூடவா பிள்ளை பெறப் போகிறேன் ?”

போங்கள் அத்தான் ! சரி, உங்களுக்கு என்ன

பிள்ளை வேண்டும் ?”

நீ என்ன பிள்ளே பெறப் போகிறாய்? அணில் பிள்ளையா ? தென்னம்பிள்ளையா ?”

‘ உங்களுக்கு ஆண்பிள்ளே வேண்டுமா-அல்லது பெண்பிள்ளை வேண்டுமா-என்று. கேட்டால், என் னென்னவோ சொல்லுகிறீர்களே அத்தான் !”

ஏன் அல்லி! உன் வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளையை இனி மாற்றமுடியுமா ? நான் ஆண்பிள்ளை கேட்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் - உன் வயிற்றில் இருப்பது பெண்பிள்ளே என்றால், நீ எனக்கு எப்படி ஆண்பிள்ளே பெற்றுத்தருவாய்? ஒருவேளை, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டைப்பிள்ளை பெறப் போகிருயோ? அப்படி யென்றால் நான் எது கேட்டாலும் நீ கொடுக்கலாம் அல்லவா ?”

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/201&oldid=656210" இலிருந்து மீள்விக்கப்பட்டது