பக்கம்:மலர் மணம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221.

வேலைக்காக ஏதேனும் விளம்பரம் வருகிறதா என நாடோறும் செய்தித்தாள்களை ஊன்றி நோக்கிவந்தேன். அலுவலக எழுத்தர் வேலைக்கு நிறைய விளம்பரங்கள் வந்தன. அதில் என்நாட்டம் செல்லவில்லை. ‘ திட்ட மிட்டால் உயர்ந்ததாகத் திட்டமிடு-அது தவறிப் போலுைம் வெற்றி பெற்றதாகவே பொருள்” என்று குறள் கூறுகிறதல்லவா ? உயர்ந்த கற்பனை யுலகத் திலேயே நான் உலவிக்கொண் டிருந்தேன். சிலர், கற்பனையைப் பகற்கனவு என்றும், கைகூடாத மனக் கோட்டை யென்றும் சாடுவது சரியாகாது. எண்ணெய்க் குடம் தூக்கிச்சென்றவன், ‘ இதை விற்றுப் படிப்படி யாகப் பணக்காரணுகி, பின்னர் குதிரை வாங்கி, டாக்டாக் என்று சவாரி செய்வேன்’ என்று குதித்துக் குடத்தைக் கீழே போட்டு இருந்த எண்ணெயையும் இழந்துவிட்ட கதையைக் குறிப்பிட்டு, கற்பனை செய்பவர் களைக் கிண்டல் பண்ணுவதும் பொருந்தாது. உலகில் முன்னுக்கு வந்துள்ள அத்தனைபேரும் எண்ணெய்க் குடம் தூக்கிச்சென்றவர்களே - அதாவது கற்பனை யுலகில் ப க ற் க ன வு கண்டு மனக்கோட்டை கட்டியவர்களே! அவர்களுள் சிலர் வெற்றி பெறுகிறார்கள் -சிலர் குடத்தை உடைத்துவிடுகிறார்கள். முன்னவரை உலகம் உயர்த்துகிறது-பின்னவரைத் தாழ்த்துகிறது. எனவே, என் பேராசை எனக்குச் சரியாகவே தோன்றியது. ஆல்ை, கற்பனைக்கும் ஒர் எல்லே உண்டு என்பது எனக்கும் தெரியும் ! -

ஒருநாள், சென்னையில் உள்ள விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றிற்கு ஓர் எழுத்தர் தேவை’ என்ற விளம் பரம் வந்தது. விஞ்ஞான ஆய்வுக்கூடம் என்ற தலைப்பைக் கண்டதும் ஆவலுடன் படித்தேன். எழுத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/223&oldid=656233" இலிருந்து மீள்விக்கப்பட்டது