பக்கம்:மலர் மணம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 223

இன்னும் எனக்கு வெளியில் இடம் கிடைக்கவில்லை. என்னுடன் எழுத்துவேலே பார்த்து வந்த இளம்பெண் கமலா என்பவள் சொந்த வீட்டுக்காரி. அவள், தங்கள் வீட்டில் மாடியில் இடம் காலி யிருப்பதாகவும் அங்கு வந்துவிடலாம் என்றும் அறிவித்தாள். அவள் என்னிடம் பழகிக்கொண்டு வந்தமுறை, எனக்கு ஐயத்தையும் அச்சத்தையும் ஊட்டியதால், அந்தச் சனியனே விலக்கு வாங்கிக்கொள்ளாமல் ஒதுங் கி க் கொண்டேன். அப்படியும் அந்த ஏழரை ஆட்டையான் விடுவதாகத் தெரியவில்லை. -

அலுவலகத்திலேயே தொடர்ந்து குடியிருப்பது முறையாகாது. ஊரிலுள்ள சொந்த வீட்டையும் இங்கே கொண்டுவர முடியாது. எத்தனையோ வீடுகள் ஏறி இறங்கினேன்-இடம் கி ைட க் க வி ல் லே . என்ன செய்வது? ‘ உலகில் ஒருவருக்காவது சொந்த விடே கிடையாது ; ஒவ்வொருவரும் இருப்பது இரவல் வீடுதான்” என்று வள்ளுவர் ஓரிடத்தில் கூறியுள்ளார். உயிர் உடம்பில் குடியிருப்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார். உடம்பில் உயிர் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியுமா ? உடம்பு என்றைக்குத் திடீர் என்று உயிரைக் கிளப்பிவிடுமோ ? சொந்த வீடா யிருந்தால் எப்போதும் நிலையாக இருக்கலாம். வாடகை வீடானல், வீட்டுக்காரன் எப்பொழுது வேண்டுமானுலும் ஒத்துழையாமை இயக்கம் செய்து குடியிருப்பவனேக் கிளப்பிவிடலா மல்லவா ? உடம்பிலே இரவல் குடி இருந்துகொண் டிருக்கும் நான், சென்னையில் அந்த உடம்புக்கு ஓர் இரவல் வீடு தேடிக்கொண்டிருந்தேன். வீட்டுத் தரகர் ஒருவர் ஓர் இடத்தை அமர்த்திவிட்டு வந்து, என்னை அழைத்துக்கொண்டுபோய் அங்கே குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/225&oldid=656235" இலிருந்து மீள்விக்கப்பட்டது