பக்கம்:மலர் மணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 21

கறுப்புக் கம்பளிக் கோட்டு-கறுப்புத் தலைத் துண்டு களுடன் உள்ள அவரது தோற்றத்தைக் கண்டால் கரடி யின் நினைவுதான் வரும்.

அவர்களது புறப்பாட்டைக் கண்ட நான் கரை யில்லாத களிப்புக் கடலில் முழ்கினேன். இனி நேரே மாமாவின் வீட்டிற்கே சென்று அல்லியைக் காணலாம். அங்கே பாட்டியும், அல்லியின் சிறு தங்கையும் சிறு தம்பியுந்தான் இருப்பார்கள் அவர்களும் நன்றாகத் துங்கிக் கொண்டிருப்பார்கள். பாட்டி இருவருக்குமே பாட்டிதான். அல்லிக்குத் தந்தையைப் பெற்ற பாட்டி; எனக்குத் தாயைப் பெற்ற பாட்டி. பாட்டிக்குத் தப்பித் தவறித் தெரிந்து விட்டாலும் பரவாயில்லை. என்னிடம் பெரும் பற்று உள்ள அவளே எப்படியாவது சமாளித்து விடலாம் என்றெல்லாம் கற்பனை யுலகில் ஆழ்ந்து கிடந்தேன். வண்டி போனதே எனக்குத் தெரியவில்லை. நிலையம் தூங்கி வழிந்துகொண்டிருந்தது.

‘டிக்கட் கொடுத்து விட்டு நிலையத்துக்கு வெளியே வந்தேன். அங்கிருந்து எங்கள் கிராமம் ஒரு கல் தொலைவில் உள்ளது. ஏதேனும் கூலி க்கு வண்டி யிருக்கிறதா என்று பார்த்தேன். இரட்டை மாட்டு வில் வண்டி யொன்றை அப்பொழுதுதான் ஒருவன் பூட்டிக் கொண்டிருந்தான். வேறு காக்கா குருவி-பேச்சு மூச்சு ஒன்றைக் காணுேம். அது யாருடைய வண்டியோ ? அல்லது கூலி வண்டிதான ? “ ஏம்பா, வண்டி வருமா ?” என்று கேட்டேன். “இது கூலி வண்டி இல்லிங்க, சொந்த வண்டி” என்ற பதில் வந்தது. ‘ எங்கே போகிறது ‘ என்றேன். ‘ மலேச்சாரல் கிராமத்திற்கு” என்றான். “நல்ல வேளை, நம் ஊருக்குத்தான் போகிறது. ஏதேனும் காசு கொடுத்து விடுகிறேன். ஊர் எல்லையில் என்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/23&oldid=656240" இலிருந்து மீள்விக்கப்பட்டது