பக்கம்:மலர் மணம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 237

விடாமல் இருக்கவேண்டும். உணர்ச்சியால் உந்தப் பட்டு, அந்த வீட்டை அடைந்து மெள்ளக் கதவைத் தட்டினேன்.

யாரது ? என்ற இனிய மெல்லிய குரலுக்குப்பின் கதவு திறக்கப்பட்டது. எதிர்பாராது என்னைக் கண்டதும், நீங்களா ? என்று மருண்டு வெருண்டாள் அல்லி. •. ;

‘ஏன், நான்தான்! இங்கே வரக்கூடாதா?”

“ நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?” - . - .

‘மலர் இங்கே படிப்பது உனக்கு எப்படித் தெரிந் ததோ, அப்படித்தான் நீ இங்கே இருப்பதும் எனக்குத் தெரிந்தது. ” -

‘நீங்கள் சொல்வது புரியவில்லையே. ”

‘ மலர் இந்தப் பள்ளிக்கட்டத்தில் சேர்ந்திருப்பதை நீ எப்படியோ தெரிந்துகொண்டுதான் இங்கேயே ஆசிரியையாக வந்திருக்கிறாய். தாயும் சேயும் சேர்ந்தது பற்றி எனக்கு,மகிழ்ச்சியே நம் திருமணப் புகைப்படம் ஒன்றை உன் படுக்கையறையில் மலர் கண்டிருக்கிருள். அதே படம் ஒன்று என் படுக்கையறையிலும் இருப்பது அவளுக்குத் தெரியும். இதேபோல் மங்களம் அக்கா விட்டிலும் ஒரு படம் இருக்கிறது’ என்று மலர் சொன்னுள். அதைக்கொண்டு நான் உன்னைக் கண்டு பிடித்தேன். நீ எப்படி மலரைத் தெரிந்துகொண்டாய்? ஊரிலிருந்து வெளியேறியதிலிருந்து உன் வரலாற்றைச் சொல்லு ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/239&oldid=656250" இலிருந்து மீள்விக்கப்பட்டது