பக்கம்:மலர் மணம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மலர்

“ நான் முன்பு சென்னைக்கு வந்து உங்களை மருத்துவ மனேயில் பார்த்துவிட்டு ஊர் திரும்பியதும், அப்பா என்னைக் கடுமையாகத் தாக்கினர். வையக்கூடாத வார்த்தைகளால் வைதார். அவற்றுள் ஒன்று, என் அடி உள்ளத்தில் ஆணியென ஆழப் பதிந்துவிட்டது. ‘நீ பொல்லாத காமுகி ; கணவைேடு சேர்ந்துகொண்டு பிள்ளே பெறவேண்டும் என்ற காமவெறியினுல்தான் நீ அவனைப் பார்க்கச் சென்றாய் ‘ என்று'அப்பா சொல்லிய பழிச்சொல் என் உள்ளத்தில் ஆழத் தைத்தது. “ இனி இங்கே இருக்காதே-வெளியேறிவிடு’ என்றும் விரட்டினர். மலரை விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொள்ள விரும்பாததால் அன்றிரவே ஆருக்கும் தெரி யாமல் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். உங்களைப் பார்க்கச் சென்னைக்கு வந்திருந்தபொழுது, அங்கே ஒரு தெருவில், ‘திக்கற்ற மகளிர் இல்லம்’ என்ற பலகை மாட்டிய ஒரு கட்டிடத்தைத் தற்செயலாகக் கண்டிருந் தேன். அது நினைவிற்கு வந்ததால், அந்த இடத்தையே அடைந்து அடைக்கலம் வேண்டினேன். ஆதரவு கிடைத்தது. அந்த இல்லத்தின் தலைவி மிகவும் நல்லவர். என் வரலாற்றை அவர்களிடம் விளக்கி, ‘ என்னைப்பற்றி எப்போதும் எவரிடமும் எதுவும் வெளியிடக்கூடாது; அப்படி வெளியிட்டால் நான் உலகத்தில் வாழமுடியாது உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று சொல்லி அவர் களிடம் உறுதி வாங்கிக் கொண்டேன். எனக்காக நீங்கள் செய்திருந்த விளம்பரமும் எங்களுக்குத் தெரியும். பேசாமல் இருந்துவிட்டோம். பிறகு என் விருப்பப்படி, என்ன ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்து ஆசிரியை ஆக்கினர்கள். நீங்கள் விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்ப்பதை எங்கள் தலைவிக்குத் தெரிவித்தேன். அவர்கள் மூலமாக:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/240&oldid=656252" இலிருந்து மீள்விக்கப்பட்டது