பக்கம்:மலர் மணம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மலர்

உறவினர்களும் நண்பர்களும் திருமணத்திற்கு வந்தனர். ஆல்ை முரட்டு மாமாமட்டும் வரவேயில்லை. அத்தையை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். அதுவரைக்கும் மேல் அல்லவா ? -

திருமணத்தைத் திருத்தணிகையில் வைத்துக் கொண்டோம். திருவிழா சமயம் அது. ஊரில் பெருங் கூட்டம். ஒரு திறந்தவெளி அரங்கில், தமிழவேள் தணிகைநாதன் அவர்கள் தலைமையில் திருமணம் ஆரம்ப மாயிற்று. தமிழ்த்திருமண மாதலின், திருவிழாவிற்கு வந்தவர் பலர் திருமணத்தை வேடிக்கை பார்க்கப் பெருந்திரளாய்க் குழு மி யி ரு ந் த னர். திருமண நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. நான் என் மகள் மலர்மணத்தைக் கண்குளிரக் கண்டு கொண்டிருந்தேன். “மலரும் மணமும் போல மலரும் மாறனும் மகிழ்ந்து வாழ்க” என்று நண்பர்கள் எழுப்பிய வாழ்த்தொலிகள் வானப் பிளந்தன. -

“ திருமண மக்கள் நீடுழி வாழ்க! இந்நாள் போலவே எந்நாளும் நன்ள்ை ஆகுக! எல்லா கலங்களும் பெற்று இனிது திகழ்க!”

என்று வாழ்த்திய குரல் ஒன்று, தாலிகட்டும் வேளையில் என் காதுக்கு எட்டியது. ஆம்! “ திருமண மக்கள் நீண்டகாலம் வாழவேண்டும். அவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியாய் இருப்பது போலவே எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இணைபிரியாது வாழ வேண்டும்.” அவர்களுக்கு எல்லா கலங்களும் வளங்களும் இனிது பெருகவேண்டும்.-என்று நான் என் மனத் திற்குள் வாழ்த்திக்கொண் டிருந்தபோது, அதே கருத் துடைய அந்த வாழ்த்துக்குரல் அதே நேரத்தில் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/248&oldid=656260" இலிருந்து மீள்விக்கப்பட்டது