பக்கம்:மலர் மணம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மல்ர்

அந்தப் பக்கம் நின்றிருந்த பெண்கள் அனைவரும் எனக்கு முன்பின் தெரியாதவர்கள் - திருவிழாவிற்கு வந்தவர்கள்--இப்பொழுது திருமணத்தை வேடிக்கை பார்ப்பதற்காக இங்கேவந்து நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களே நோக்கி, ‘ இங்கு நின்றுகொண்டு வாழ்த்துக் குரல் எழுப்பிய பெண் எங்கே ?” என்று கேட்டேன். ‘இந்நேரம்வரை இங்கே தா ன் நின்றுகொண்டிருந் தார்கள். இப்பொழுதுதான் இந்தப் பக்கமாகப் போய் விட்டார்கள்"-என்று அவர்கள் சொன்னர்கள். “அந்த அம்மா எப்படியிருந்தார்கள்” என்று கேட்டேன். “அந்த அம்மாவுக்குக் கிட்டத்தட்ட நாற்பது வயது நெருங்கியிருக்கும்-நல்ல சி வ ப் பு நிறம்-முக்காடு போட்டுக்கொண் டிருந்தார்கள்-திருமணத்தை மிகவும்: முகமலர்ச்சியோடு பார்த்துச் சுவைத்துக்கொண்டு இருந்தார்கள்-நீங்கள் இந்தப் பக்கம் வரத்தொடங்கி யதும் அவர்களும் புறப்பட்டு விட்டார்கள்-குறிப்பாகச் சொல்ல வேண்டுமானுல், இந்த மணப் பெண்ணின் முகச் சாயல் அந்த அம்மாவுக்கும் இருக்கிறது-இதோ இந்தப் பக்கம்தான் போர்ைகள்-வேண்டுமானல் போய்ப் பாருங்கள் !” என்று அந்தப் பெண்கள் சொன்னர்கள்.

“ அல்லி அல்லி’ என்று அழைத்துக்கொண்டே அவர்கள் காட்டிய பக்கமாக ஓடினேன் தேடினேன்; சுற்றிச் சுற்றி அலைந்தேன். என் அல்லி கிடைக்கவே யி ல் லே. என்றைக்கிருந்தாலும் எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வாள் என்று நாகை வலிய என்னைத் தேற்றிக் கொண்டேன். வேறுவழி ? பின்னர், என்னைத் தேடுவார்கள் என்ற நினைவு வரவே, திருமண அரங் கிற்குத் திரும்பினேன். அனைவரும் திருமண ஆர வாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். என்ன எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/250&oldid=656263" இலிருந்து மீள்விக்கப்பட்டது