பக்கம்:மலர் மணம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மலர்

இந்தக் கேள்விக்கு அல்லியிடமிருந்து உடனே பதில் வரவில்லை. பேசாது தலைகுனிந்து கொண்டாள். நானும் சிறிது நேரம் காத்திருந்தேன். குனிந்தவள் குனிந்த வளே.

நான் இந்த நேரத்தை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டேன். இந்நேரம்வரை நான் அல்லியை நன்றாகப் பார்க்கவில்லை. என்னே விழுங்கி விடுபவள்போல் ஆ வலு ட ன் பார்த்துக்கொண்டிருப்பவள், நான் ஏறெடுத்துப் பார்த்ததும் குனிந்து கொள்கிருள். இக் காட்சியை அடிக்கடி கண்டேன். அவள் பார்ப்பதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்? அவளே ஆசைதிரப் பார்க் கட்டும் என்று நான் இந்நேரம் வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தேன். ஆல்ை, அவள் வைத்தகண் வாங்காமல் என்னைப் பார்த்து மகிழும் திறத்தை மட்டும் குறிப்பாகத் தெரிந்து கொண் டேன். இப்போது என்னுடைய முறை. அவள் என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தலைகுனிந்து கொண்டே யிருந்ததால், இப்போது நான் என் ஆர்வம் அடங்க அவளேக்கண்டு களிக்கலானேன். இல்லை யில்லை, ஆர்வம் அடங்குவதா? பார்க்கப் பார்க்க ஆர்வம் பெருகிக்கொண்டே யிருந்தது. வள்ளுவரும் காமத்துப் பாலில் இப்படித்தான் ஓரிடத்தில் கூறியிருக்கிறார்.

என்னைப்பற்றி யார் என்ன எ ண் ணி ைலும் எண்ணிக் கொள்ளட்டும் - உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் திரைப்படம் பார்க்கும்போது, அதில் நடிக்கும் அழகியரைக் கண்டு...... வேண்டாம், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...... நமக்கு இவ்வளவு அழகிய பெண் மனேவியாக வாய்ப்பாளா? எந்தத் திருமேனி நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/28&oldid=656267" இலிருந்து மீள்விக்கப்பட்டது