பக்கம்:மலர் மணம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மலர்

பைத்தியம் என்றால், உன் தந்தை முக்கால் பைத்தியம் ; இன்னும் முற்றவில்லை. இந்த அரையையும் முக்காலையும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மணந்து கொள்ள முடியும்? மேலும், உனக்குத் திருமண ஏற்பாடு முடிந்து விட்டதாகத் தெரிகிறதே”

“ முயன்றால் இந்த ஏற்பாட்டை மாற்ற முடியாதா?”

‘முடியும், உன் அப்பா முயன்றால்”

“அவருடைய குரங்குப் பிடிதான் உங்களுக்குத் தெரியுமே. அவராக மாறவே மாட்டார். காமாகத்தான்

மாற்றவேண்டும்”.

‘முடிந்து போன காரியமாக இருக்கிறதே, அதுவும் மாப்பிள்ளை ஒரு போலீசுகாரராக வேறு இருக்கிருரே.”

‘நீங்கள் என்னே மணந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தால், நான் அந்த மாப்பிள்ளையை மணந்து கொள்ள மாட்டேன் என்று அப்பாவிடம் அடம் பிடித்து விடுவேன்’. -

“ உன் அப்பா எவ்வளவு அடத்துக்கும் மசியவே மாட்டாரே “.

“ அப்பா மசியாவிட்டாலும், நான் மறுக்கிறேன் என்ற செய்தி எப்படியாவது அந்தப் போலீசு மாப்பிள்ளை யின் காதுக்கு எட்டிவிடு மல்லவா? அவர் படித்த-பகுத் தறிவுள்ள மனிதராக இருப்பா ராதலால், தன்னை விரும் பாத பெண்ணைத் தானும் விரும்பாமல் கைவிட்டு விடலா மல்லவா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/36&oldid=656276" இலிருந்து மீள்விக்கப்பட்டது