பக்கம்:மலர் மணம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மலர்

“நல்ல செய்தி இருக்கிறது. நாளை மாயாண்டி வீட்டில் நடக்கவிருக்கும் பரியம் நின்றுவிடும். இந்தக் குழப்பம் எல்லாம் அடங்கிய பின்பு, உங்கள் மகள் கற்பகத்துக்கும் போலீசு மாப்பிள்ளை பாண்டியனுக்கும் அடுத்தவாரம் பரிய விழா நடத்தி விடுவோம். அப்புறம், இன்னொரு கிராக்கி கொண்டுவந்திருக் கிறேன்.” - -

‘ என்ன அது ?”

“கற்பகம் திருமணத்தை உங்கள் வீட்டில்தான் நடத்தப் போகின்றீர்கள். செலவோடு செலவாக, உங்கள் மகன் அழகன் திருமணத்தையும் கூடச் சேர்த்து

நடத்திவிடலாமே.”

‘ அவனுக்கு என்ன அவசரம் இப்பொழுது ? அவன் படித்துக் கொண்டிருக்கிருனே.”

‘ உங்கள் பிரியம். உங்கள் வீட்டு அம்மாவுக்கு உடம்பு சரியில்லே என்பதற்காகத்தானே கற்பகத்தின் திருமணத்தையும் விரைவு படுத்துகிறீர்கள். அதற் காகத்தான் அழகன் திருமணத்தையும் உடனடியாக நடத்திவிடலாம் என்கிறேன் நான்.”

“ அப்படியா......... ! ஒருவகையில் நீ சொல்வதும் சரிதான் குருசாமி சரி, பெண் பார்க்கவேண்டுமே.”

“ அதுதான் ஒரு கிராக்கி கொண்டு வந்திருப்பதாகச் சொன்னேன். ஒன்று என்ன-இரண்டு என்றுகூடச்

g # , சொல்லலாம்.”

“ விவரமாகச் சொல்லு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/90&oldid=656336" இலிருந்து மீள்விக்கப்பட்டது