பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன்என் அப்பன் பொங்குமூ உலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமு உருவன்னம் அருவன்’’’ (இமையவர் அப்பன்-தேவாதி தேவன்; உருவன் உருவத்தையுடையவன்; அருவன்.அந்தராத்மாவாக இருப் பவன்.) "எங்கள்’ என்றும் ‘யாமுடை’ என்றும் பன்மையாகச் சொல் வதனால் ஆழ்வார் சம்பந்தம் பெற்ற நம்போலியரையும் அவர் உளப்படுத்திக் கூறுகின்றார் என்று கருதலாம். கேசவன் தமர்க்குப் பின்பு தனியரல்லரே” என்பது ஈடு'. "குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும், ஒன்றிநின்ற சடகோபன்" என்று தம்மைக் குறிப்பிட்டவரன்றோ? "இமையவர் அப்பன் என்று சொல்லிய உடனே என்.அப்பன்' என்று கூறுவதனால் நித்திய சூரிகளை அடிமைகொண்டாற் போல் தம்மையும் அடிமை கொண்டவன் என்று உரிமை கொண்டாடுகின்றார் ஆழ்வார். குறைவற்றார்க்கும் ஸ்த்தா ஹேதுவாய் குறைவுக் கெல்லையான எனக்கும் ஸத்தா ஹேது வானவன்' என்பது ஈடு. நான்முகனுக்கு அந்தர் யாமியாக இருந்து படைப்புத் தொழிலை, நடத்தியும், தானான தன்மையில் காத்தலைப் புரிந்தும், உருத்திரனுக்கு அந்தர்யாமியாக இருந்து அழித்தல் தொழிலை மேற் கொண்டும் இருக்கும் எம்பெருமான் தனது அச்சத்தைப் 2 திருவா8.4:2, 21. கேசன்வதமர் (திருவாய் 2.7) என்ற பன்னிரு திருநாமப் பாட்டினை நினைவு கொண்டு. 22 திருவாய் 7, 4; 11. - 23 ஸ்த்தாசத்தை; இருப்பு உளதாம் தன்மை.