பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மலைநாட்டுத் திருட்பதிகள் (பேர்உருவம்-பெரிய வடிவம்; குறியமாண்-வாமன பிரமசாரி: குரைகடல்-ஒலிக்கின்றகடல்; கோலமாணிக்கம்அழகிய இரத்தினம்.) என்ற பாசுரப் பகுதியில் மாபவியின் வலியை அடக்கிய செயலும் கடல் கடைந்த செயலும் குறிப்பிடப் பெறு கின்றன. மூவுலகின் பெருமைக்குத் தக்கவாறு எம்பெருமான் தன் உருவத்திலும் பெருமை கொண்டான் போலும். திருவுருத்தைப் பெரிதாக வளரச் செய்தது மூவுலகங்களையும் அளந்து கைப்பற்றிக் கொள்வதற்காக அன்று; நடைபெற. முடியாததையும் நடைபெறும்படி செய்ய வல்லவனாக (அகடி தகடநா சமர்த்தன்)' எம்பெருமான் தன் சிறிய உருவத்தாலும் மூவுலகையும் வெல்ல வல்லவன். ஆயினும் இங்ஙனம் வளர்ந்த காரணத்தை நம்பிள்ளை, 'தொடங்கிய காரியம் வென்ற மகிழ்ச்சி மிகுதியாலே ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே வளர்ந்த படி' என்று அருளிச் செய்திருப்பது இன்சுவை மிக்கது. இந்த உலகில் ஒருவனுக்குத் தன் விருப்பம் நிறை. வேறப்பெற்றால் உடல் பூரிப்பதை நாம் காண்கின்றோ மன்றோ? அப்படியே இங்கும் எம்பெருமான் பக்கவில் பல்லைக் காட்டிப் பரிதாபம் தோன்ற நின்ற இந்திரனுக்குத் தான் துணை செய்யப் புகுந்து அது நிறைவேறப் பெறுகை யாலே உடல் பூரித்ததாயிற்று. குறியமாண் எம்மான்' என்பதில் கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று' என்று ஆண்டாள் ஈடுபடும்படி அழகே வடிவெடுத்ததாகக் கொண்ட வாமன வடிவத்தையும் இரவலனாய் நின்ற, நிலையையும் காட்டித் தம்மை அடிமைப்படுத்திக் 25. அ+கடித-கடநா- நடைபெறாததையும் நடை பெறும்படிசெய்யவல்ல - 26. ப்ரீதி - மகிழ்ச்சி; ப்ரகர்ஷம் அதிகம். 27. நாச். திரு. 4 : 9