பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் §§ கொண்டவன் என்னும் கருத்து இதில் நிழலிடுவது கண்டு மகிழத்தக்கது. அன்றியும், பெருவிலையதான இரத்தினம் போல் இருக்கின்ற வடிவத்தைக் கொண்டல்லவா கடலைக் கடைந்தான் எம்பெருமான்? இங்கனம் தன் ஆற்றலையும் அதிகையும் காட்டித் தன்னை அடிமை கொண்டான் என்ற குறிப்பு குரை கடல் கடைந்த கோலமாணிக்கம் என் அம்மான்' என்ற தொடரில் இருப்பதைக் கண்டு மகிழலாம். திருச்சிற்றாற்று எம்பெருமாள் ஆழ்வாருக்கு அச்சு மற்ற புகலிடம் தருபவனாவான்; அவருக்கு உயிர் போன்றவன்; நித்திய சூரிகட்குத் தந்தையாகவும் தாயாகவும் இருப்பவன்; விரிந்த திருப்பாற் கடலிலே அறிதுயில் கொண்டுள்ள அ4 பெருமானின் தன்மை அவனாலேயே அறிதற்கரியது. 'எனக்குநல் அரணை எனதுஆார் உயிரை இமையவர் தந்தைதாய் தன்னைத் தனக்கும்தன் தன்மை அறிவுஅf யானைத் தடங்கடற் பள்ளி அம்மானை' (அரண்-புகலிடம்; இமையவர்-நித் திய சூரிகள், கடல்திருப்பாற்கடல்.) - என்பது பாசுரப் பகுதி. இத்தகைய பெருமானைத் திருச்செங் குன்றுார்த் திருச்சிற்றாற்றில் கண்டதாகக் கூறுகின்றார் ஆழ்வார். இங்கினம் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்”* இருக்கும் எம்பெருமான் ஆழ்வாருக்கு நாதனாக இருப்பவன் . அவனது பரத்துவத்தையும் செளலப்பியத்தையும் ஒப்பிட்டு வியந்து பேசுகின்றார் ஆழ்வார். இந்த மாநிலம் பிரளயத்தில் 28. திருவாய் 8.4 : 5 29. டிெ 1.1 : 1