பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி மலைநாட்டுத் திருப்பதிகள் கலவியினாலும் பிரிவினாலும் ஒரு பரமபதத்தைப் போலே ஆக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை என்பது இதன் கருத்து. இதை மேலும் விளக்குவோம்; நித்திய சூரிகள் திருக்கடித்தானத்தில் வந்து தேசு உற்றனர். அங்கு மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த கோயில் கொண்டமையைக் கண்டபோது இவன் இந்த நாட்டை விடான் என்று தோன்றிற்று. அங்கு நின்று ஆழ்வாரின் நெஞ்சைப் பரிசுத்தமாக்கி அங்குக் குடிகொண்டான். அமரர்கள் நிற்க அங்கு இடம்வேண்டுமல்லவா? அவன் திருவுள்ளத்தினால் இவர் நெஞ்சமும் பெரிய நாடு போலாயிற்று; அது நித்திய விபூதி என்ற நாடாகவும் கொள்ளப்படும். நித்திய விபூதியை விட்டு வந்த பிரிவும் இவர் நெஞ்சக் கலவியில் அவனது அருளால் இவரது நெஞ்சினையே பரமபதம் போலாக்கி விட்டது. 'காணவாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்துப்பட்ட' இவரது விடாய் எல்லாம் தொலையும் படி இவரது நெஞ்சத்தில் நிரந்தரமாகக் குடியேறினான் எம்பெருமான். தாம் உகந்த இடம் என்று திருக்கடித் தானத்தையும் துறந்தான் அல்லன் அங்கும் கோயில் கொண்டிரா நின்றான் என்கின்றார். எம்பெருமான் அன்பு கூர்ந்து தம் நெஞ்சகத்தில் குடியேறியதனால் இவருடைய வல்வினைகள் யாவும் ஒழிந்து போயின என்று அகம்மகிழ்ந்து இனியராகின்றார் ஆழ்வார். இதனால் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த பிரான்' என்று பின்னரும் எம்பெருமானை நினைந்து போற்றுகின்றார். அந்தத் திருப்பதியைத் துதித்த அளவிலேயே துக்கங்கள் யாவும் தொலைந்து போகும் என்று நமக்கும் வலியுறுத்துகின்றார். "திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே" என்பது அவரது திருவாக்கு 15. திருவாய். 8. 5 ; 2. 7. 6. 8. 6. 6.