பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் 99 நிற்கும் எம்பெருமானின் நேர்மையைக் காண அவாக் கொண்டு நித்திய சூரிகளும் வந்து கிட்டுகின்ற திருப்பதி யாகும் இது. பரமபதம் நித்திய சூரிகளுக்கே இருக்குமாப் போலே, உகந்தருளினதேசம் சம்சாரிகளுக்கே யாக இருக்கை’ என்பது ஈடு. இங்கு உள்ளார் அங்குப் போவது மேன்மையை அநுபவிக்க; அங்குள்ளோர் இங்கு வருவது சீல குணாநுபவம் பண்ணுகைக்கு’ என்ற ஈட்டின் குறிப்பையும் கண்டு தெளிக. கோவிந்தன்' என்ற பெயர் மிகவும் எளியன் என்ற பொருளில் வந்துள்ளமையை உணர்க. பரமபதம், திருப்பாற்கடல் போன்ற மேலுலகத்திலுள்ள தலங்களும் இந்நிலவுலகிலுள்ள தலங்களும் கடலில் உள்ளவையும் எம்பெருமானுக்கு மி க ச் சிறந்த இருப்பிடங்களேயாகும். ஆயினும் அவற்றின்மீது அவன் (ஆதரம்) அன்பு உடையவன் அல்லன்; தன் நெஞ்சையும் அந்நெஞ்சில் வதிவதற்குச் சாதனமாக இருந்த திருக்கடித்தானம் என்ற திருப்பதியையும் தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த இடமாக விரும்பியிரா நின்றான் என்கின்றார். 'தான நகர்கள் தலைசிறந்து எங்கு எங்கும், வான்இந் நிலம்கடல் முற்றும்எம் மாயற்கே ஆன விடத்தும்என் நெஞ்சும் திருக்கடித் தான நகரும், தனதாயப் பதியே’’’’ (தானநகர் - வதியும் நகரங்கள்; தாயப்பதி - முறையாக வந்த ஊர்.} என்பது பாசுரம். வழிவழி வரும் சொத்தாகையால் அதனை அவசியம் அநுபவிக்க வேண்டும் என்பது குறிப்பு. எல்லாத் திருப்பதிகளும் அவனுக்கு முறையாக வந்தவையாயினும், 22. திருவாய் 8.5 : 8