பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் 107 ஆழ்வார்களின் உள்ள்த்தையும் கவர்ந்த எம்பெருமான், நம் நல்வினைப் பயனால் நம் உள்ளத்தையும் அருள் சுரந்து கவர்ந்ததனால் அவனைச் சேவிக்க வேண்டும் என்ற அவா உந்த விரைவாக நடந்து வருகின்றோம். நடைபாதையின் இருமருங்கும் அடர்ந்து வளர்ந்துள்ள சோலைகளும் தோப்புகளும், வயல்களும் வாவிகளும், பூம்பொழில்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர் கின்றன. இவை நம்மாழ்வார் கருத்தையும் கவர்ந்ததனால் அக்கவர்ச்சி அவர் திருவாய்மொழி முழுவதும் ஊடுருவி இருப்பதைக் காண்கின்றோம், அத்திருவாய்மொழி மகள் பாசுரமாக வடிவங் கொண்டுள்ளது. திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுவது போல் நடைபெறுகின்றது. இத்திருப்பதி எம்பெருமான் மீதுள்ள திருவாய்மொழி. திருமங்கையாழ்வாரோ தாமான தன்மையில் நின்று பேசுகின்றார். தம்முடைய நிலையை உள்நோக்கி ஆய்ந்து சம்சாரபந்தம் (இவ்வுலகத் தொடர்பு) இன்னும் கழியவில்லை என்பதையும், இழவுக்கு அடியான உடல் உறவு இன்னமும் தொடர்ச்சியறாது இருப்பதையும் கண்டு மனம் கவல்கின்றார் திருமங்கையாழ்வார். திருவல்லவாழ் திருப்பதியை வாயாலே சொல்லுவதாக நெஞ்சு மருவப்பெற்றால் நன்று என்று தோன்றிற்று. தோன்றவே, அதனை நெஞ்சுக்கு உரைப்பதாக நடைபெறு கின்றது. இவரது திருமொழி. கோயிலை நோக்கி நடந்து செல்லும்போதே முதலில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் நம் சிந்தையில் குமிழி யிடத் தொடங்குகின்றன. - "தந்தைதாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்,