பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் 119 என்ற பாசுரத்தை இனிக்க இனிக்க ஓதி உளம் மகிழ்கின் றோம். இங்கனம் மகிழ்கின்ற நிலையில் ஆசாரிய ஹிரு தயத்தின், "மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை, தென்னகரிலே நித்யம்’’’ (தென்னகர்-திருவல்லவாழ்; சேமம்-காவல்) என்ற சூத்திரம் நினைவுக்கு வர அதனையும் சிந்தனை செய் கின்றோம். எல்லை யில்லாத இனிமையை யுடைய ஆராவமுதை (எம்பெருமானை) விரைவிலே கிட்டி அநுப விக்கப்பெறாமையாலே, நாள்தோறும் மெலியுமளவிலும், காப்பாற்றுபவன் அவனே என்று துணிவு கொண்டிருக்கும்படி செய்யும் என்றும் உள்ள அவனது திருவருளானது திருவல்ல வாழ் என்னும் திருப்பதியில் நித்தியமாக இருக்கும் என்பதனை நினைவு கொள்ளுகின்றோம். இந்நிலையில் பக்தியநுபவம் கரைபுரண்டோடத் திருக்கோயில் பிரசாதங் களைப் பெற்று நம் இருப்பிடத்திற்குத் திரும்பச் சித்தமா கின்றோம். 32 AG 165,