பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண் வண்டுர் தேவாதிதேவன் 127 கைகொள் சக்கரத் தென்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே’’’ (வைகல் - நாள்தோறும்; பூங்கழி - உப்பங் கழி; குருகு - கொக்கு; செய் - வயல்; வினையாட்டியேன் - பாவத்தைப் பண்ணின என்னுடைய, கா தன்மை - காதல் தன்மை.) என்பது பாசுரம். உணவின் பொருட்டு வந்து வந்து மேயும் குருகினங்களை நோக்கி நீங்கள் திருவண்வண்டுர் சென்றால் அங்கும் உங்கட்குத் தேவையான ஏராளமான உணவு கிடைக்கும்' என்பதை செய் கொள் செந்நெலுயர் என்ற சொற்றொடரால் குறிப்பிடுகின்றாள். எம்பெருமானைத் தெரிந்து கொள்ள இரண்டு அடையாளங்கள் கூறுகின்றாள். இதற்கு முன்னுள்ள திருவாய் மொழியில் 'பிறந்தவாறும்' என்று கண்ணன் அவதாரத்தை எண்ணி மோகங் கொண்டவ ளாதலால் அந்த அவதாரத்தில் கையும் திருவாழியுமாகப் பிறந்தமை தன் உள்ளத்தில் ஊறியிருப்பதனால் அவ்வடை யாளத்தைக் கைகொள் சக்கரத்து’ என்று குறிப்பிடுவது முதல் அடையாளம். அடுத்து வளர்ந்த வாறும்' என்று ஆயர்பாடியில் வளர்ந்தபடியைக் கருத்தில் இருத்தினவளா தலால், கண்ணன் அவ்வாயர்பாடியிலுள்ள பெண்டிர்க்கு அணுக்கனாய் இருந்து கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்த படிகள் யாவும் அவளது திருவுள்ளத்தில் நிழலிட்டுத் தோற்றுகின்றன. எனவே, கனிவாய்ப் பெருமான் என்று குறிப்பிடுவது இரண்டாவது அடையாளம், அப்பெருமான் தன்னிடம் வந்தபோது தன்னுடைய கெளசில்யம் தோற்ற இருந்தான் என்றும், பிரிந்து சென்ற 9. திருவாய் 5.1 : 1 10. டிெ 5.10 : 1. 11. டிெ 5,10 !