பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டுர் தேவாதிதேவன் 135 ஏறுசே வகனார்க்கு என்னை யும் உளள் என்மின்களே' (வேறுகொண்டு - தனிமையில்; வெறி - வாசனை தேறுநீர் தெளிவானநீர்: அரக்கன் - இங்கு, இராவணன்: நீறு - துரசிகள்; சேவகள் . வீரன்.) தம் தலைவர் பெண் பிறந்தார் காரியங்களை யெல்லாம் செய்து தலைக்கட்டி விட்டதாக இருப்பார் என்று நினைத்திருக்கலாம். அங்ஙனம் நடைபெற இல்லை என்றும், காக்கப்பெறவேண்டிய கூட்டத்தில் தானும் ஒருத்தி இருப்பதாகச் சொல்லுமாறும் இரக்கின்றாள். தனிமையாக அழைத்துச் சொன்னதற்கு ஈடு: திக்குகள் தோறும் முதலிகளைப் போகவிடா நிற்கச் செய்தே திருவடி கையிலே திருவாழி மோதிரம் கொடுத்து விட்டாப் போவே காணும்' என்பது, மற்றைய பறவைகளைவிட வண்டுகள் காரியம் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அறுதியிடு கின்றாள். இவ்விடத்தில் இராமன் சிறிய திருவடியிடம் தனிமையில் அழைத்துப் பேசி திருவாழியைக் கொடுத்ததாகக் குறிப்பிடும், ஆண்டுகடந் தப்புறத்தும் எப்புறத்தும் ஒருதிங்கள் அவதி யாகத் தேண்டிஇவண் வந்தடைதிர் விடைகோடிர் கடிதென்னச் செப்பும் வேலை நீண்டவனும் மாருதியை நிறையருளால் முகநோக்கி நீதி வல்லோய்! காண்டிஎனிற் குறிகேட்டி எனவேறு கொண்டிருந்து கழறலுற்றான்' (தேண்டி. தேடி அடைதிர் சேருங்கள்: செப்பும் வேலை . சொன்னபோது; காண்டி எனில் - காண்பாயானால்; 25. திருவாய் 5. 1:9 26. டிெ 6, 1:10, 27. கம்பரா. கிட்கிந் நாடவிட்ட 32