பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மலைநாட்டுத் திருப்பதிகள் துள்ளமை ஈண்டு கருதத்தக்கது. தொல்காப்பியனார் அறத் தொடு நிற்றலைப் புரைதீர்கிளவி என்று குறிப்பிடுவர். இறையனாரோ மாறுகோள் இல்லாமொழி என்பர். "தோழிக்குரியவை கோடாய் தேஎத்து மாறுகோ ளில்லா மொழியுமார் உளவே”* (கோடாய் - செவிலித்தாய்; கொள்+தாய் எனப் பிரித்து தாயாகக் கொள்ளப்படுவோள் எனப் பொருள் படும்.) என்ற நூற்பாவினால் இதனை அறியலாம். மாறுகோளில்லா மொழி என்பதற்கு உரையாசிரியர் கூறும் விளக்கவுரை : 'எற்றினோடு மாறுகொள்ளாமையோ எனின். தாயறிவி னொடு மாறுகொள்ளாமையும், தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் தோழி தனது காவலொடு மாறு கொள்ளாமையும், நாணினொடு மாறு கொள்ளாமையும் உலகினொடு மாறுகொள்ளாமையும் எனக் கொள்க’ என்பது. தலைவிக்கு வாய்ந்த களவொழுக்க நிகழ்ச்சியினால் தம் மேற்படுவதான குற்றம் ஏதுமில்லை என்று இவ்வா றெல்லாம் இவையனைத்திற்கும் மாறுகோளில்லாத வகை யாய்த் (குற்றமில்லாதவகையாய்) தோழி ஆய்ந்து கூறுவாள். எவ்வ்ெப்பொழுதெல்லாம் அறத்தொடு நிற்கும் நிலை ஏற்படும் என்பதையும் இறையனார் அகப்பொருள் விரித் துரைக்கின்றது. காவல் மிகுதி காரணமாக தலைமகட்கு வேட்கை பெருகும்பொழுதும், அயலார் வரைந்து புகும் காலம்வரும் பொழுதும், வரைவு ஏற்றுக்கொள்ளாது தமர் அவ்விடத்து மறுக்கும்பொழுதும்,தலைவனுக்கு நிகழும் ஏதம் 5. இறை. கள், நூற்பா - 14. 7. டிெ நூற்பா 2ெ9,