பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 163 எம்பெருமானைப் பாடவில்லை. திருமங்கையாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிகமான திருப்பதிகளைப் பாடியவர் நம்மாழ்வாரே யாவர். இவ்விரு ஆழ்வார்களும் சிற்றரசர் களாக இருந்ததால் பயணம் செய்வதில் மிகவும் சிரமமாக இருந்த அந்தக் காலத்தில் யாத்திரை செய்ய வசதி பெற் றிருந்தனர் என்று கருதலாம். ஆனால், நம்மாழ்வாருக்குப் பல தலங்களிலுமுள்ள மூர்த்திகளே அவர் இருக்கும் இடம் தேடிவந்து சேவை சாதித்தனர் என்றும், அவர் திருப்புளி யாழ்வாரின் அடியிலிருந்து கொண்டே பல்வேறு தலங்களை யும் பாடினார் என்றும் குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன ஆழ்வாரும் தாம் சென்று சேவித்த தலங்களை எல்லாம் அங்கங்கே சென்றபோது பாடவில்லை என்பது உண்மை. பெரும்பாலும் இவரது பிரபந்தங்கள் யாவும் அந்தாதி முறை யிலிருப்பதால், இவை ஓரிடத்தில் ஒரே காலத்தில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்று ஊகம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அங்ங்ணம் பாடுங்கால் அந்தப் பாசுரங் களின் போக்கிற்கு இசைந்தவாறு தலங்களை மீண்டும் தம் மனக்கண்ணால் கண்டு ஒரு முறையில்லாமல் குறிப்பிட் டிருத்தல் வேண்டும். இவர் பாடியுள்ள தலங்களைத் தொகுத்துப் பார்த்தால் தம்முடைய நாட்டிலும் (திருநகரியைத் தலைநகராகக் கொண்ட வழுதி நாடு, அஃதாவது இப்போதுள்ள திருநெல்வேலிப் பகுதி) தம் அன்னையார் பிறந்த மலையாள நாட்டிலும் உள்ள தலங் களையே பாடினார் என்பது தெரியவரும். மேலும் மதுரை, திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், கும்பகோணம் வழி யாகத் திரு வெங்கடத்திற்குச் சென்றார் என்பதும், அங்ங்னம் சென்றபோது வழியிலுள்ள சில தலங்களையும் பாடினார் என்பதும் ஊகத்தினால் ஒருவாறு விளங்கும். உலகம் எங்கும் இறைவன் சந்நிதியே” என்றும் தம்முடைய