பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 169 உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்' (உடனே ஒருசேரர் 'துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு மயர்வு அற மதி நலம் அருளுவாரைப் போலப் புகுந்தான்' என்பது குறிப்பு. ஆயினும், ஆழ்வார் திறத்தில் 'திரு அருளை இறைவனே பெற்றவனாக ஆயினன். இங்கே நம் பிள்ளை ஈடு வியக்கத் தக்கது: "அவன் அங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேகத்தையே விரும்பிப் போந்தார்; அவன் இவரை அங்கீகரித்த பிறகு இவர் தம் தேகத்தைவெறுக்க, அவன் இவருடைய தேகத்தை விரும்பிப் புக்கான். இவருக்கு அவனுடைய சேர்க்கை சொரூப ஞானத்துக்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராகவிரும்புவதற்கு உடல் ஆயிற்று'." இறைவனுடைய இத்திட்டத்தை "அறிகிலேன்......... 经秘·8泛 சிறிய என் ஆருயிர் உண்ட திரு அருளே' என்கின்றார் ஆழ்வார். தம் பக்கம் பிச்சேறின எம்பெருமானின் வஞ்சனைக ளனைத்தும் ஆழ்வாருக்குச் செவ்வியனவாகவே தோன்றா நின்றன: இறைவன் உண்டு அநுபவித்து சாரம் அற்றதா யிருக்கும் இவருடைய ஆன்மா சிறிது அறிவை அடைந்து இரவும் பகலும் புலம்பிக் கொண்டு அவன் எழுந்தருளி யிருக்கும் திருக்காட்கரையை ஏத்தத் தொடங்கியது. "புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல் 24. திருவாய் 9, 6 5 25. ஈட்டின் தமிழாக்கம் - பகுதி 9 (திருவாய் 9, 6 :5.) 26. திருவாய் 9, 6 : 4