பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் ims எண்ணித் தன்னை அடியோடு பருகிவிட்டான். ஆழ்வாருக்கு இறைவன் 'உண்ணும் சோறு பருகும்நீர்' என்னாலாம்படி இருந்தான். அங்ங்னமே இறைவனுக்கும் ஆழ்வார் உண்ணும் சோறு பருகும் நீர்' என்று ஆகிவிட்டார். திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாட்டு உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம். இந்தப் பாசுரத்தை நினைவில் கொண்டு இத்திருத்தலத்தில் விளங்கும் குணத்தை, போகத்தில் தட்டுமாறும் சீலம், காட் கரையிலே கரையழிக்கும்' (தட்டுமாறு-முறை மாறுதல், சீலம்-பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கை) என்று பேசும் ஆசாரிய ஹிருதயம், காட்கரை என்ற திவ்வியதேசத்தின் பெயருக்கு ஏற்பக் கரையழிக்கும்’ என்கின்றார். ஈசுவர இலாபம் உயிர்கட்குக் குறிக்கோளா? அல்லது உயிர்களின் இலாபம் ஈசுவரனுக்குக் குறிக்கோளா? என்ற ஆராய்ச்சி வைணவ பக்தர்களிடம் நடைபெறுவதுண்டு. உயிர்களின் இலாபம்தான் ஈசுவரனுக்குக் குறிக்கோள் என்பதுவே வைணவ சித்தாந்தம். எம்பெருமான் தன் படைப்பினாலும் அவதாரங்களினாலும் ஆன்மப் பயிர்த் தொழில் செய்வ தெல்லாம் ஒர் ஆருயிர் தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையினாலன்றோ? எல்லாம் வாசுதேவன் என்று திருவுள்ளங் கொண்டுள்ள ஒரு மகாத்மா எனக்குக் கிடைக்கவில்லையே' என்றன்றோ சொல்லுகின்றான் 39. திருவாய். 6, 7 : 1. 40. ஆசா. ஹிரு. 178 41. பகவத் கீதை 7 9