பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χίν வைணவ உலகில் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்க ராசாரிய சுவாமிகளை அறியாதார் இல்லை. அவருடைய திவ்வியார்த்த தீபிகை (நாலாயிரத்தின் உரை) என்னுடைய பிஎச்.டி (Ph.D) ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. அவருடைய வேறு இரகஸ்ய கிரந்த உரை களும் நன்கு பயன்பட்டன. அந்த நூல்களைப் பயிலுங்கால் அவருடைய எல்லையற்ற புலமையும் பக்தியும் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. என் மனங்கரைந்து அவருக்கு ஆட்பட்டேன். அதனைப் புலப்படுத்தும் வகையிலும், அவரது எண்பதாவது ஆண்டு நிறைவின் (சதாபிஷேகம்) மகிழ் வாகவும் இந்நூலை அவரது திருவடி மலர்களில் அன்புப் படையலாக்குகின்றேன். அன்னாரது ஆசியால் ஆழ்வார் களுடைய அருளிச் செயல்களிலும், ஆசாரியர்களுடைய உரைகளிலும் எனக்குத் தெளிவும் பக்தியும் மேலும் மேலும் பெருகும் என்பது என் திடமான நம்பிக்கை. இந்நூலை எழுதி வெளியிடுவதற்கு என்னுள்ளே தோன்றாத் துணையாக நின்று என்னை இயக்கி வரும் திருவேங்கடமுடையானை மனம் மொழி மெய்களால் இறைஞ்சி வாழ்த்தி வணங்குகின்றேன். திருப்பதி, க. சுப்பு ரெட்டியார் மார்ச்சு 31, 1971