பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 195 மிகமேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்துஎன் அகமேனி ஒழியாமே திருமூழிக் களத்தார்க்கே’’’ (தகவு - நியாயம்; தடம்-விசாலமான அகமேனி-அந்த ரங்கமான உடல்.) 'தகவு அன்று என்று உரையீர்கள்-என்பது இதயத்தில் தைக்கும்படியான சொல் என்பது ஆழ்வார் நாயகியின் திருவுள்ளம், எம்பெருமானது பிரிவினால் உடலும் மெலிந்து மேகலையும் தங்காதபடி சீர் குலைந்தது. இனி தன் "அகமேனி ஒழிவதற்கு முன் தன் நிலையைத் தெரிவிக்குமாறு அன்னங்களை வேண்டுகின்றாள். எல்லா ஆன்மாக்களும் எம் பெருமானுக்கு உடலாக இருப்பினும் (சரீர-சரீரிபாவனை) தன் ஆன்மாவை அகமேனி என்று சிறப்பிக்கின்றார் ஆழ்வார். இவ்வுலகில் எம்பெருமானுக்குக் கிடைத்தற்கரிய "மகாத்மா அன்றோ ஆழ்வார்? ஈண்டு ஆசாரியர்களே அன்னமாக விளிக்கப் பெறுகின்றனர் என்பது அறியத்தக்கது. தங்கட்குப் பேரின்பம் பயக்கும் துண்பொருள்களைத் தேடு வதில் நோக்குடையவர்களாதலாலும், நல்ல நடத்தையை யுடையவர்களாயிருத்தலாலும் அவர்கள் மென்னடைய அன்னங்கள்’ எனப்பட்டனர். இங்கனம் ஆழ்வார் பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பேசிய அநுபவத்தை நினைந்த வண்ணம் திருமூழிக்களத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் மதுரவேணி நாச்சியாருடன் சேவை சாதிக்கும் திருமூழிக்களத்தானை வணங்கிக் களிக்கின்றோம்; நம்மாழ்வார் பெற்ற அநுபவத் 32. திருவாய் 9.7 : 10,