பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மலை நாட்டுத் திருப்பதிகள் எழுந்தருளியிருந்த சீடர்களை நோக்கி ஆழ்வார் பாரித்த கோயில் குறைதிரத் திருவேங்கடமுடையான் கோயில் கொண்டிருக்கும் இடத்திலிருந்து கொண்டு நித்திய கைங் கரியம் செய்ய விருப்பமுடையார் ஆரேனும் உண்டோ? என்று வினவியருள, குளிர் அருவி வேங்கடம் ஆகையால் எல்லோரும் அங்கு நிலவும் குளிருக்கு அஞ்சி விடை கூறா திருக்க, உடனே அனந்தாழ்வான் என்ற சீடர் எழுந்து "அடியேனுக்கு நியமித்து அருளவேண்டும் என்று பணிவாகக் கேட்டாாம். அதனைக் கேட்டு உகந்த எம்பெருமானார் நீர் ஒருவரே ஆண் பிள்ளை' என்று அவரைப் பாராட்டி அவரைத் தழுவியருளி விடை கொடுத்தனுப்பினார். அது முதலாக அவருக்கு அனந்ததாண்பிள்ளை என்ற மற்றொரு திரு நாமமும் வழங்கலாயிற்று. அந்த ஆழ்வான் அன்று அமைத்த குளல், நந்தவனம் முதலியவற்றை இன்னும் நாம் திருமலை ušči; &mdorajirth. A., T. C. (Anantaivan Tank Cottages) என்ற திருக்கோயிலுக்குப் பின்புறம் உள்ள பகுதி அனந்தாழ் வான் பெயராலேயே வழங்கி வருமாறுசெய்த கோயில் ஆட்சி யாளரின் நன்றியுணர்வு பாராட்டத்தக்கது. நிற்க. 'வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று பாரித்து நிற்கும் நம்மாழ்வார் திருநாவாய் சென்று அங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். நம்மாழ்வார் பிராட்டியின் நிலை யிலிருந்து கொண்டு திருமுழிக்களத்து எம்பெருமானுக்குத் துனது அனுப்பியதாக நாம் அறிந்தோமல்லவா? தூது சென்ற வர்கள் மீண்டு வந்து செய்தி சொல்லும் வரையில் பொறுத் திருக்க வேண்டும். ஆழ்வாரால் பொறுத்திருக்க முடிய வில்லை. அவர்கள் திரும்பும் வரையில் நாவாயில் உறையும் ಸ್ವಣ್ಣಣ್ಣ நம்பியைக் கிட்டுவோம் என்று பார்க்கின்றார். ஆனால் அவனது அழகில் நெஞ்சைப் பறிகொடுத்து § காலாழும்: நெஞ்சழியும், கண்சுழலும்' என்ற நிலை 2. பெ. திருவந்-34