பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மலைநாட்டுத் திருப்பதிகள் அடை மொழியுடன் அத்தலம் திருதாவாய் என்று வழக்கி லிருந்து வருகின்றது. "துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பதுஓர் தோணி பெறாது உழல்கின்றேன்: என்ற ஆண்டாளின் திருப்பாசுரத்திலும் இறைவன் துன்பக் கடல் கடத்தும் தோணியாக அருளிச் செய்யப் பெற் லுள்ளமை காண்க. பிரிவுத் துன்பத்தைத் திருமூழிக் களத்துத் திருவாய்மொழியிலே கண்டோம். அதனை சண்டு நினைle கூர்க,' " பராங்குச நாயகி (நம்மாழ்வார்) இருந்த இடத்திலி ருந்து கொண்டே எம்பெருமானை அறுபவிக்க எண்ணு கின்றாள். 'வெறித்தண் மலர்ச்சோலைகள் சூழ்திரு நாவாய் குறுக்கும் வகையுண்டுகொலோ கொடியேற்கே’’** (வெறி - நறுமணம்; குறுக்கும்-குறுகும் மலையாள மொழி வழக்கு.: என்று மநோரதங்களைப் பண்ணுகின்றாள். அந்தத் திவ்விய தேசத்துக்கு அண்மையில் வாழும்படியான உபாயம் உண்டோ என்று எண்ணுகின்றார். குறுகும் வகை’ என்பது மலையாள மொழி வழக்காகப் பாட்டில் அமைந்து கிடக் கின்றது. இதுபற்றி ஒர் ஐதிகம் சொல்லுவதுண்டு. ஒரு சமயம் இராமாதுசர் மலைநாட்டுத் திருப்பதியாத்திரை யாகச் சென்றிருந்தார். திருநாவாய்க்கு அணித்தாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது எதிரிலே வந்து கொண் 14. நாச். திரு 5 : 4 15. மூழிக்களத்து விளக்கு என்ற கட்டுரை காண்க. 16. திருவாய் 9,8 : 1.