பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மலைநாட்டுத் திருப்பதிகள் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களிடம் இவ்விரோதிகள் யாவும் அனுகா என்பது கருத்து. இத்தகைய எம்பெருமான் பெரிய பிராட்டியாரோடும், பூமிப் பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடும் திருநாவாயில் எழுந்தருளியுள்ளான். இதனை ஆழ்வார், "கொடியேரிடைக் கோகனகத் . தவள்கேள்வன் வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் சூழ் நெடியான்உறை சோலைகள் திருநாவாய்' (கொடியேர் - கொடியைப் போன்ற; கோகனகம். தாமரை, கேள்வன் - தலைவன்; அணுகப்பெறும் - கிட்டப்பெறும்.) என்றும், “மணாளன் மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்; கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம்; விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்' και ξ ξ Tமணாளன் - கணவன்; மலர்மங்கை - பெரிய பிராட்டி: மண்மடந்தை-பூமிப் பிராட்டி, கண் ஆளன்-தலைவன்; விண் ஆளன்.பரமபதநாதன்.) என்றும் கூறுகின்றார். மண்ணுலகத்தையும், விண்ணுலகத் தையும், பரமபதத்தையும், ஆட்சிபுரியும் எம்பெருமான் திருநாவாயில் விரும்பியுறைகின்றான். பெரிய பிராட்டியோ பரிந்துரைப்பதில் (புருஷ காரத்தில்) ஊன்றியிருப்பவள்; 19. திருவாய் 9,8 : 2 20. ങു. 9,8 5