பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற பாசுரத்தைப் பாடி அநுபவிக்கின்றோம். நல்ல வேளை பாக நடையுடன் இருக்கும் நாம் அவனருளாலே அவன் தாள் வணங்கும்’ பேறு பெற்றமைக்கு அந்த எம்பெரு மானின் திருவருட்பெருக்கினை தினைந்து போற்றுகின்றோம். திருவாங்கூர்ப் பகுதியை அரசாண்ட மார்த்தாண்ட வர்மன் என்ற கேரள அரசர் கி. பி. 1749இல் தன்னுடைய தாடு முழுவதையும் அனந்தபதுமநாபனுக்கு அன்புப் படைய லாக்கித் தான் “பதுமநாபதாசன்' என்ற பெயருடன் அந் நாட்டினைப் புரந்த செய்தியை அறிந்து உடல் புளகாங்கிதம் கொள்ளுகின்றோம். அன்றிலிருந்து திருவாங்கூர்ப் பகுதி மக்கள் அரண்மனையில் வாழும் அரச குடும்பத்துடன் அன்புத் தொடர்பும் பக்தித் தொடர்பும் கொண்டுள்ளனர். இந்த அரசர் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை மேற் கொண்டதையும் அறிகின்றோம். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்ற முதுமொழிக் கிணங்க இன்றும் கேரள நாட்டிலுள்ள திருக்கோயில்கள் மிக்க பக்தியுடன் பரிபாலிக்கப் பெற்று வருவதைக் காண்கின்றோம். இத் திருக்கோயிலில் ஆண்டில் இரண்டு முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஒன்று மீனத் திருநாள்; மார்ச்சு - ஏப்ரலில் நடைபெறுவது. மற்றொன்று, துலனத் திருகன்; அக்டோபர் நவம்பரில் நடைபெறுவது. திரு விழாக்களின் இறுதி நாளன்று எம்பெருமான் பதுமநாடனை ஊர்வலமாக சங்கு முகம்’ என்ற கடற்கரைக்குக் கொண்டு சேல்கின்றனர். பதுமநாபன் அங்குக் கடல் நீராடித் இருவோலக்கம் கொண்டு எண்ணற்ற மக்களுக்குச் சேவை சாதிக்கின்றார். இங்ஙனம் எம்பெருமான் ஊர்வலமாகச் செல்வதை ஆராட்டு என்று அப்பகுதி மக்கள் வழங்கி வருகின்றனர். இவ்விதிா ஆயிரக்கணக்கான மக்களை ാങ്ങ 42. இருவ- சிவபுரா. அடி - 18