பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கணம் ஏவாள் தாவீது கல்லறை தேவமாதா நாசரேத் |ಿಸಿ (်စီဂss) பாதிரி கொல்கதா - @lു சம்மனசு மரியம்மாள் சிலுவை மேய்ப்பர் சூசை முனி லாசரு சேசு வான ராஜ்யம். 24. வழக்கில் சிதைவு - இலக்கணம் உலக வழக்கில் சிதைந்து வழங்கும் சொற்கள் பல. அவற்றில் சில இலக்கியங்களிலும் வழங்குகின்றன. அவற்றை மரூஉ மொழிகள் என்பார்கள். சொற்களில் நிகழும் சிதைவை ஆராய்வது மிகவும் சுவையான ஆராய்ச்சி. மொழி நூலறிஞர்களுக்கு இந்தச் சிதைவு நெறி பல உண்மைகளே விளக்குகிறது. சொல்லின் உருவம் எப்படியெல்லாம் மாறி வரும் என்பதை இந்தச் சிதைவுகளே வகைப்படுத்திப் பார்த்து உணர்ந்து கொள்ள லாம். கொச்சைத் தமிழ், கொச்சை மொழி என்று நாம் இவற்றை வழங்குகிருேம். -- - பகுபதம் பகாப்பதமாகிய ஒரு மொழிகள் சிதைவதும், இரு மொழித் தொடர் சிதைந்து ஒரு மொழிபோல வழங்கு வதும், பன்மொழித் தொடர் சிதைந்து ஒரு மொழிபோல வழங்குவதும் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ளன. முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையான விகாரங்களும் பெற்றுச் சொற்களும் சொற்ருெடர்களும் சிதைகின்றன. . ஒரே சொல்லுக்கும், சொற்ருெடர்க்கும் வெவ்வேறு விதமாகச் சிதைந்த உருவங்கள் வேறு வேறிடங்களில் வழங்கும். இந்த வேறுபாடு இடம், வகுப்பு முதலியவற் றிற்கு ஏற்ப அமையும். கின்று என்ற ஒரு சொல்லே வழக்கில் கின்னு என்றும், கிண்ணு என்றும், கிண்டு என்றும், கிந்து என்றும் பலவகையாகச் சிதைந்து வழங்கு வதைக் காண்க. அவர்கள் என்ற சொல்லே அவங்க, மலை-7 - 97