பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மலே அருவி வெயிலடிக்கும் நேரத்திலே - கண்மணியே வெளிவருமாம் மீன்களெல்லாம். நாரைகளும் கொக்குகளும் கண்மணியே நல்ல நல்ல குருவிகளும் பறக்குமாம் தண்ணிக்குமேலே - கண்மணியே பயம்கொஞ்சங்கட்ட இல்லாமே. சின்னஞ்சிறு மீனேயெல்லாம் - கண்ணே அது செந்துக்காத் துளக்கிடுமாம். 40 வெயிலடிக்கும் நேரமெல்லாம் - கண்ணேதண்ணி வெள்ளிபோலே மின்னுமடி. குடிதண்ணியும் குளிதண்ணியும் கண்மணியே குடம்குடமா எடுப்பாங்களாம். தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே அதைத் தடுக்கஒரு நாதியில்லை. பாப்பானுக்கும் பச்சைத்தண்ணி - கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி. காசித்தீர்த்தம் ஆடப்போல்ை - கண்ணே அங்கே காண்கிறதும் பச்சைத்தண்ணி, 45 பட்டிக்காட்டில் பலசாதியாம் - கண்மணியே பறையன்முதல் பாப்பான்வரை. தோட்டிமுதல் தொண்டைமான் வரை-கண்மணியே தொழுந்தண்ணி பச்சைத் தண்ணி. சண்டையிழுக் குங்கண்ணியும் - கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத் தண்ணி. தெய்வம்போலே இருக்குங் தண்ணி - கண்மணியே திருடனுக்கும் பச்சைத்தண்ணி, ஏழைபாழை எல்லாருக்கும் - கண்மணியே இருக்கிறது. பச்சைத்தண்ணி. 50 எண்பதடிக் கிணற்றிலேயும் கண்மணியே இறைக்கிறது. பச்சைத் தண்ணி.