பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 49 பாட்டிஉன்னை அடித்தாளோ பாலூற்றும் கையாலே? நீட்டிஉன்னை அடித்தாளோ நெய்யூற்றும் கையாலே என்று கேட்கிருள் தாய். குழந்தை படுத்திருக்கும் மெத்தையை, பஞ்சுமெத்தை பட்டுமெத்தை பரமசிவன் கொடுத்தமெத்தை மாமனுர் கொடுத்தமெத்தை மல்லிகைப்பூச் செண்டுமெத்தை அக்கா கொடுத்தமெத்தை அழகான தங்கமெத்தை மேலு வலிக்காமே மெத்தைமேலே படுத்துறங்கு!" என்று சிறப்பிக்கிருள். இந்தத் தாலாட்டுக்குப் பிறகு 'மீன் பாட்டு வருகிறது. அப்பன் மீன் பிடிக்கப் போனதும், பலவகை மீனைப் பிடித்துச் சென்று விற்று வந்ததும், தாய் விற்று வந்ததும், விற்ற பணத்தைக் கொண்டு குழந்தைக்கு அணிசெய்து போட்டதும் இதில் தொடர்ச் சியாக வருகின்றன. பிறகு வருவது கோயில் தாலாட்டு. முருகன் ஊர்வலம் வருவ தும் யாவரும் தரிசிப்பதும் இதில் சொல்லப்பெறுகின்றன. தந்தையின் பயணத்தைச் சொல்கிற தாலாட்டும், வேட்டை யைப் பற்றிச் சொல்லும் தாலாட்டும், அறுவடையை வருணிக் கும் தாலாட்டும் அடுத்தடுத்து கிற்கின்றன. பிறகு உபதேசம் என்னும் தலைப்பில் உள்ள தாலாட்டில் மார்கழி மாதம் முதல் கார்த்திகை முடியவுள்ள பன்னிரண்டு மாதங்களிலும் வெவ்வேறு காரியங்களைச் செய்கையில் கடவுளே வழிபட வேண்டுமென்று தாய் சொல்கிருள்; திங்கட்கிழமை முதல் ஞாயிறு முடிய ஏழு நாட்களிலும் எந்தக் காரியம் செய்தாலும் நியாய வழியில் நடக்க வேண்டுமென்று அவள் அறிவுறுத்துகிருள். - பின்பு உள்ள கதம்பமான தாலாட்டில் சில அருமையான கண்ணிகள் இருக்கின்றன. V 1, чл. 219 : 5, 6. i 2. L. 221: 80—83. |