பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பார்வைப் பூக்களை
வெளிச்சப் பருந்துகள்
கவர விருப்பதைக்
கருத்தில் நிறுத்து.
கண்களின் கற்பைக் காக்க
இயற்கை ஒளியில் இரண்டறக் கலந்து
காட்சிக் கருவைச் சுமந்து வா.

மின்ஒளி விலங்குகள்
சுற்றிச் சீறும்
யாழ் நகருக்குப்
பயந்து ஒதுங்கி
இருட்டில் காட்டில்
வாழ்வைத் தொடங்கு

என்கிறார் கவிஞர்.

இந்த விதமாக விரக்தித் தொனியில் பல கவிதைகள் அமைந்திருப்பினும், மலையருவி நம்பிக்கை வறட்சி கொண்டவரில்லை: நம்பிக்கை உணர்வை எங்கும் எவருக்கும் பரப்புவதில் ஊக்கம் உடையவராக இருக்கிறார். இதற்கும் அவருடைய கவிதைகளே சான்று கூறுகின்றன.

'விடியல்' பிறக்கட்டும்
இந்தப் பயணத்தில்
பல்லக்கு சுமக்கின்ற
கற்பனை ஊன்றுகளை
முறித்துப்
பாதைப் பயணிகளாய்
கடப்பில் தேய்வோம்