பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23
பிய்த்தெறிந்த
பூச் சிதறல்களில்
உமிழ்ந்த எச்சிலை
உறிஞ்சத் துடிக்கும்
வண்டுகள்
ஊன்றிய காலை
உதறி விடுமுன்
சதையை அரிக்கும் கரையான்கள்.

இவற்றை காட்சிப்படுத்தும் கவிஞர் 'சுடு காட்டிலுமா?'என்று கேட்கிறார்.'மனிதத் தின்னிகள்' என்று தலைப்பிட்டு,

'கல்லறைத் தவங்கள்' நல்ல கவிதை

"ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனைத் தவங்கள்"

என்று சிந்திக்கத் தூண்டுகிறது கவிதை.

ஒருசிறு பொறிக்குள்
ஒடுங்கிய மூச்சுகள்
அடங்கிய பேச்சுகள்

ஆண்டுகள் அடங்கி
ஆற்றலாய் நிமிர
ஐந்து விரல்களுக்குள்
ஓர் அடங்காச் சக்தி