இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணபதி தோத்திரம்
l. | குள்ளக் குள்ளனை |
குண்டு வயிறனை | |
வெள்ளிக் கொம்பனை | |
விநாயகனைத் தொழு. | |
2. | குள்ளக் குள்ளக் கணபதியாம் |
குண்டு வயிற்றுக் கணபதியாம் | |
வெள்ளிக் கொம்புக் கணபதியாம் | |
விநாயகர் பாதம் போற்றிடுவோம். | |
3. | குள்ளக் குள்ளனை |
குண்டு வயிறனை | |
அஞ்சு கரத்தனை | |
ஆனை முகத்தனை | |
நெஞ்சில் நினைக்க | |
நலமுண்டாகுமே. |