பக்கம்:மழலை அமுதம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கும்மாயம்
(பாயாசம்)


              கும்மா கும்மா கும்மாயம்
              கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்
              அம்மா தெய்வம் கும்பிடு
              அப்பா தெய்வம் கும்பிடு
              அவரே தெய்வம் கும்பிடு
              அன்பாய் என்றும் நடந்திடு
              கும்மா கும்மா கும்மாயம்
              கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்

   
குறிப்பு : கும்மாயம் என்பதற்கு பாயாசம் என்பது பொருள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/8&oldid=1231071" இலிருந்து மீள்விக்கப்பட்டது