பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதாவது கடந்த காலத்தில் உரைத்திருக்கிறார்கள் என்று தொல்காப்பியத்திலே இலக்கணம் குறிப்பிடுகிறதென்றால் தொல்காப்பியத்திற்கும் முற்பட்டது நம்முடைய தமிழ் மொழி அத்தகைய தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களாகிய நமக்குக் கிடைத்த மற்றொரு கருவூலம் உலகம் போற்றும் கருவூலம் உலகப் பொது மறையாகப் பாராட்டப்படுகின்ற கருவூலம் திருக்குறள். அது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மதச் சார்பற்ற பொதுவான இலக்கியம், மறை, கீர்த்தி வாய்ந்த இலக்கண இலக்கியங்களுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை நிலை நாட்டுகின்ற அடையாளங்களாகத்தான் தொல்காப்பியமும், திருக்குறளும் நிலவுகின்றன. உங்களுக்குத் தெரியும். உலகப் புகழ் எய்திய கிரேக்க பாரம்பரியம் இப்போது இல்லை. எகிப்திய மொழிக் கலாச்சாரமும் இப்போதில்லை. ஆனால், இன்னமும் இலங்கையில் தொல்காப்பியத் தமிழைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ர - என்ற எழுத்து சொல்லின் முதலில் வரக்கூடாது என்பது இலக்கணவியல். ஆனால் நாம் "ரத்தம்" என்றுதான் ர - என்ற எழுத்தை சொல்லின் முதலி ல் வைத்து எழுதிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இ -என்ற எழுத்தைச் சேர்த்து “இரத்தம்” என்றுதான் எழுதுவார்கள். எனவே இலங்கைவாழ் தமிழர்கள் இன்னமும் தொல்காப்பிய காலத்தை மறக்கவில்லை. இது ஒரு எடுத்துக்காட்டு. நம்முடைய தமிழுக்கு எத்தனையோ பொருள் உண்டு. இனிமை என்றும், புதுமை என்றும், பழமை என்றும் எத்தனையோ பொருள் உண்டு. எத்தனையோ சிறப்பு உண்டு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அழகான வரி ஒன்றினால் சித்தரித்தான். " தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் எழுதினான். அது என்ன 6