பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடக் கூடாதென்று கருதிய ஆண்டவன் சிவன், அந்த விஷத்தையெடுத்துப் பருகினான். பருகும்போது பக்கத்திலே இருந்த பாரியாள், பார்வதி தேவியார் முழுமையாக விழுங்கிவிட்டால் சிவனுக்கு ஆபத்து வருமேயென்று பயந்து அது தொண்டைக்குள் போகும்போதே கழுத்து கண்டத்தைப் பிடித்துவிட்டாள். விஷம் அங்கே நின்றுவிட்டது. விஷம் நின்ற இடம் சிவனுடைய கழுத்திலே ஒரு கண்டமாக மாறிவிட்டது. அதுமுதல் உலகத்திலே இருக்கின்ற எல்லா ஆண்களுக்கும் கழுத்திலே ஒரு கண்டம் முடிச்சு போன்ற (பலத்த சிரிப்பு) பகுதி ஏற்பட்டது. இப்படி உருவானதுதான் அமிர்தம் என்ற சொல். அப்படி அப்படி உருவான அந்த அமிர்தத்தை நானும் குறிப்பிடவில்லை. வள்ளுவரும் குறிப்பிடவில்லை. எதை அமிழ்தம் என்கிறார்? நான் 7வது அதிகாரத்திலே மக்கட்பேறில் அமிழ்தம் என் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறாரே அந்த அமிழ்தத்தை 2வது அதிகாரத்தில் எப்படி குறிப்பிடுகிறார் தெரியுமா? வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் அமிழ்தம் பற்றி குறிப்பிடும்போது "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று" வானத்திலிருந்து உலகம் உய்ய வழங்கப்படுகின்ற காரணத்தால் மழையை அமிழ்தம் என்று அழைக்கிறோமென்று குறிப்பிடுகிறார். உலகத்தை மனிதர்களை வாழவைக்க வானத்திலி ருந்து உலகத்திற்கு வழங்கப்படுவதால் அதை அமிழ்தம் என்று அழைக்கிறோமென்று குறிப்பிடுகிறார். 9