பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா அவர்கள் எத்தனை புலவர்கள் சங்க காலக் கட்டத்திலே வாழ்ந்தார்கள் என்று கணக்கெடுத்து புறநானூற்று புலவர்களுடைய பட்டியலை மாத்திரம் வெளியிட்டு தம்பிக்கு எழுதிய கடிதத்திலே சுட்டிக்காட்டியிருந்தார். நான் அதைப் படித்துப் பார்த்தவுடனேயே அண்ணா புறநானூற்றுப் புலவர்களை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறார். அகநானூற்று புலவர்களையும் சேர்க்க வேண்டுமேயென்று அந்தக் கணக்கையும் எடுத்து நான் சேர்த்துப் பார்த்தேன். ஏறத்தாழ அந்தப் புலவர்களின் எண்ணிக்கை 210ஐ எட்டுகிறது. 210 பேர் அகநானூறு, புறநானூறு பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அத்தனைப் பேர்களுடைய பெயர்களையும் சொல்லாவிட்டாலும், சில பேர்களுடைய பெயர்களைச் சொன்னால் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட பெயர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்ற அந்த உண்மை நமக்குத் தெரியும். அடை நெடுங்கல்வியார், அண்டர் மகன் குறுவழுதி, அரிசில்கிழார், அள்ளூர் நன்முல்லையார், அந்தி இளங்கீரனார், அம்முவனார், ஆடுதுறை மாசாத்தனார், ஆலங்குடி வங்கனார், ஆலத்தூர் கிழார், ஆலியார், ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார், ஆலங்குடி வங்கனார், ஆலம்பேரி சாத்தர், நற்கண்ணையார், இடைக்காடனார், இடைக்குன்றூர்க்கிழார், இரும்பிடர்த்தலையார், ஈழத்துப் பூதன் தேவனார், உலோச்சனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார், உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார், உரோடகத்துக் கந்தரத்தனார், உலோச்சனார், ஊட்டியார், ஊன்பொதி பசுங்குடையார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், எருமை வெளியனார், எயினந்தை மகனார் 13