பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கிரனார், எருவை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார், ஐயாதிச் சிறு வெண்டரையர், ஐயூர் முடவனார், ஐயூர் மூலங்கிழார், ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார் என்று பட்டியல் நீளுகிறது. (பலத்த கைதட்டல்) பெரியார் வந்த பூமி இது, அறிஞர் அண்ணா அவர்கள் வந்து உரையாற்றிய பூமி இது, ஆன்மீகக் கருத்துக்களை இங்கே வந்து வழங்கிய குன்றக்குடி அடிகளார் வந்த பூமி இது. இங்கே அடியேனும் வந்து உங்களை காணுகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. (பலத்த கைதட்டல்) நம்முடைய இலக்கியங்களிலே இன்றைக்கு நான் முதலி லே குறிப்பிட்டதைப் போல பொது மறையாக இன்றைக்கும் போற்றப்படுவது குறள். இந்தத் திருக்குறளுக்கு நான் உரை எழுதியிருக்கிறேன். குறளோவியம் மாத்திரமல்ல; உரையும் எழுதியிருக்கிறேன். அந்த உரை எழுதும்போது கற்பனையாக அல்ல, வேண்டுமென்றே வலிந்து அல்ல, இப்படித்தான் வள்ளுவர் எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு நானே மாத்திரமல்ல, பல புலவர்களோடு கலந்து பேசி நான் இந்த உரையை எழுதியிருக்கிறேன். நான் எழுதியதையேகூட திருத்த வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஏற்கனவே "தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை". என் ற இந்தக் குறளுக்கு பரிமேலழகர் போன்றவர்களும், அதைப் பின்பற்றி டாக்டர் மு.வ. போன்றவர்களும் எழுதியுள்ள உரை என்னவென்றால் தெய்வத்தைக்கூடத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் 14