பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கோலாலம்பூரில் பொது வரவேற்பில் முதல்வர் கலைஞர் இலக்கிய உரை பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய டத்தோ சாமிவேலு அவர்கள் "தமிழ்க்கடல் வரப்போகிறது. தமிழ்க்கடல் வரப்போகிறது" என்று கூறினார்கள். ஆமாம் என் எதிரே கடலே வந்து நிற்கிறது (பலத்த கைதட்டல்) இந்தக் கடலில் நான் இருக்கின்ற இந்த மேடை ஒரு தெப்பமாக மிதந்து கொண்டிருக்கின்றது. (கைதட்டல்) மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குக் கலாச்சார உறவை உறுதிப்படுத்துகின்ற வகையிலும் அத்துடன் தொழில்துறை, வணிகத்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் தொடர்புகளை வலுப்படுத்துகின்ற வகையிலும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் ஐந்தாவது நாளாக இன்று உங்களையெல்லாம் சந்திக்கும் நல்ல வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். தமிழகத்தில் இந்தியத் திருநாட்டில் நான் மேற்கொண்டிருக்கின்ற அரசியல் இயக்கத்திற்கு சோதனைகள், வேதனைகள் வந்தன என்றும், அவற்றை அங்குள்ள மக்கள் மாத்திரமல்லாமல் கடல் கடந்து வாழ்கிற நீங்களும் உங்களுடைய அன்பான ஆதரவால் தாங்கிக்கொண்டு அந்த இயக்கத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய தொலைவில் இருந்தாலும் கருணைப்பார்வை என் மீதும், நான் தலைமையேற்றிருக்கின்ற அரசியல் இயக்கத்தின் மீதும் ம் என்றைக்கும் மாறாமல் இருந்துகொண்டு வருகின்றது. இதில் எந்தவிதமான ஐயப்பாடும் கிடையாது. இருப்பினும் அரசியல் வெப்பத்தை தணித்துக்கொள்ள