பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோலுமாக வாலிப வயதினன் ஆனாலும் வயதானவனைப் போன்ற தோற்றமுடைய ஒருவனை அங்கே பார்க்கிறான். பார்த்தவுடன் அவன் யார் என்று தெரிகிறது, சந்தேகத்தோடு அவனைப் பார்த்து - உன் பெயர் துரைசாமிதானே என்று கேட்க அவன் ஆமாம் என்கிறான். அந்தத் துரைசாமி யார் தெரியுமா? நான் படித்தேனே பட்டியல் அதில் இரண்டாவதாக படித்த மருதுபாண்டியனின் இளைய மகன் வீரப்போரிட்டு மடிந்தானே வெள்ளையரை எதிர்த்து, அந்த மருது பாண்டியனின் மகன் துரைசாமிதான் அவன். (பலத்த கைதட்டல்) அவன்தான் ஈளை கட்டி இருமலோடு - பரட்டைத் தலையோடு பராரி கோலத்தோடு பரங்கியருக்கு முன்னால் நின்றான். இதைப்பற்றி அந்த பரங்கியன் ஜேம்ஸ் வால்ஷ் என்ன எழுதியிருக்கிறான் என்பதையும் நான் உங்களிடம் படித்துக் காட்ட விரும்புகின்றேன். "துரைசாமி” என்ற பெயரைக் கேட்டதும் என் நெஞ்சில் யாரோ கட்டாரியால் குத்தியதுபோன்ற உணர்வைப் பெற்றேன். நான் சிறை பிடித்து கப்பலிலே 15 வயது பையனாக ஒப்படைத்த கைதிதான் இன்று பினாங்கில் என் முன் நின்றான். வெளித் தோற்றத்திலே மாற்றங்கள், ஆனால் உள்ளம் அதே உள்ளம் கடந்த காலநினைவுகளை என் முன்னால் எதிரொலித்தது. என் பெயரை அவன் சாதாரணமாக தெரிந்து கொண்டதும் என்னுடைய பழையகால நட்பை நினைவு கூர்ந்து தன்னுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி ஒரு கடிதத்தைக் கொடுக்கக் கூடிய அளவிற்கு நம்பிக்கை வயப்பட்டான். ஆனால் அப்போதிருந்த ஆங்கிலேய அரசின் ஆணையின்படி அது விதிக்கு மாறானது என்பதால் நான் அந்த உதவியைச் செய்ய முடியவில்லை” என்று எழுதியிருந்தான். இவ்வாறு மருதுபாண்டியனின் மகன் துரைசாமி பிச்சைக்காரக் கோலத்தில் இருந்து தன்னை சிறைப் பிடித்து 24