பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 தூத்துக்குடியிலிருந்து அனுப்பிய ஜேம்ஸ் வால்ஷ் இடமே ஒரு கடிதத்தை உறவினர்களிடம் தர முடியுமா என்று கொடுத்தபோது அதை வாங்க மறுத்துவிட்டேன் என்று வருத்தத்தோடு குறிப்பு எழுதியிருக்கிறான். அந்தத் துரைசாமி என்ன ஆனாரோ, எப்படியானாரோ. இன்று துரைசாமியின் வாரிசுகளாக வந்தவர்கள் எத்தனை பேர் இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்களோ (பலத்த கைதட்டல்) எனக்குத் தெரியாது. வீரப் பரம்பரையின் வழித்தோன்றல் துரைசாமி விடப்பட்ட நாடு மட்டுமல்ல இது. தமிழகத்தின் சோழ மன்னன் இந்தக் கடல் பரப்பில் கடாரம் வரையில் வந்து சென்றான் என்ற வரலாறு நமக்கு உண்டு. இன்றைக்கும் மலேசிய நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருக்கின்ற 'கடா' தான் அந்தக் காலத்து கடாரம். அதை நினைவுப்படுத்தும் வகையில் இன்றைக்கும் திருவாரூருக்கு அருகே கடாரங்கொண்டான் என்ற ஊர் தஞ்சை மாவட்டத்திலே இருக்கிறது. அந்த ஊர் வழியாகச் செல்லும்போது கடாரங்கொண்டான் என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் சோழ மன்னனுடைய நினைவு மாத்திரமா வருகிறது? அந்த கடாரம் இருக்கின்ற பகுதியில் என்னுடைய தமிழ் மக்களாகிய நீங்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே என்கின்ற அந்த நினைவும் அல்லவா எனக்கு வருகின்றது. சோழ மன்னர்கள் மன்னர்கள் மாத்திரமல்ல; பாண்டிய மன்னனுடைய தூதுவர்கள் ஒரு காலத்தில் ரோமாபுரியிலே அகஸ்டஸ் மன்னனுடைய மாளிகையில் அத்தாணி மண்டபத்திலே பாண்டிய நாட்டுத் தூதுவர்களாக வீற்றிருந்தார்கள் என்ற வரலாறு நமக்கு உண்டு.