பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மொழிகளையும்விட நம்முடைய மொழி மூத்த மொழி. இதை நான் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை. (கைதட்டல்) உண்மையைத்தான் சொல்கிறேன். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியின் நிலையிலே இதை நான் சொல்லவில்லை. உள்ளபடியே இது பொன் குஞ்சுதான். மூத்த மொழிதான் நம்முடைய தமிழ்மொழி. சிலர் ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னபோது கோபித்துக்கொண்டு ஒரு மேடையிலே ஒரு முறை நான் பேசும்போது எனக்கொரு சீட்டு அனுப்பினார்கள். பெரியார் இப்படிச் சொல்கிறாரே என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் தந்தை பெரியார் காட்டுமிராண்டி டி என்று சொன்னது உண்மைதானே என்றேன். திடுக்கிட்டார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி இது. அதாவது கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பு காட்டுமிராண்டிகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். அந்தக் காலத்திலேயே இந்த மொழி பிறந்தது (கைதட்டல்) என்று கூறினேன். அதைப் போலவே திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வளவு கீர்த்தி வாய்ந்த இலக்கியங்கள் நமக்குச் சொந்தமானவை. உலகப்புகழ் பெற்ற கிரேக்க பாரம்பரியம் இப்போதில்லை. எகிப்திய மொழி கலாச்சாரம் இப்போதில்லை ஆனால் புயலுக்கும், சூறாவளிக்கும், பெரு வெள்ளத்திற்கும், ஊழிக்கும், பூகம்பத்திற்கும், நிலநடுக்கத்திற்கும் ஆடாமல் அசையாமல் இருக்கின்ற ஒரே மொழியாக நம்முடைய தமிழ்மொழி இருக்கின்றது (புலத்த கைத்தட்டல்) அதனால்தான் இன்னமும் இலங்கையில் தொல்காப்பிய காலத்துத் தமிழைத்தான் பேசுகிறார்கள். நம்மால்