பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கையை நினைக்க முடியாமல் இருக்குமா? (கைதட்டல்) தமிழில் சொல்லின் முதலில் ‘ர’ என்ற எழுத்து வரக்கூடாது என்பது இலக்கணம். நானேகூட 'ர' என்றுதான் எழுதுகிறேன். ஆனால் இலங்கையிலே 'ர'விற்கு முன் 'இ' என்ற எழுத்தைச் சேர்த்து இரத்தம் என்று எழுதுகிறான் எனும்போது அவன் என்னைவிட மேலானவன்தான். இந்தத் தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியுள்ளன அந்த இலக்கியங்களை வெறும் வர்ணனை இலக்கியம் கற்பனை இலக்கியம் என்றில்லாமல் அறிவுரைகளைத் தருகின்ற பல லக்கியங்களை புலவர்கள் மாத்திரமல்ல அரசர்களே எழுதியிருக்கிறார்கள். அரசர்கள் மாத்திரமல்ல வணிகப் பெருமக்களும் புலவர்களாக மாறி எழுதியிருக்கிறார்கள். பெண்களும் பெரும் புலவர்களாக இருந்து எழுதியிருக்கிறார்கள். அகநானூறு, புறநானூறு பாடல்களை எழுதிய புலவர்கள் ஏறத்தாழ 210 பேர்கள் என்ற கணக்கை நான் சிங்கப்பூரில் பேசும்போது குறிப்பிட்டேன். அவர்கள் 1. அடை நெடுங்கல்வியார், 2. அண்டர்மகன் குறுவழுதி 3. அரிசில்கிழார், 4. அள்ளூர் நன்முல்லையார், 5. அந்தி இளங்கீரனார், 6. அம்மூவனார், 7. ஆடுதுறை மாசாத்தனார், 8. ஆலங்குடி வங்கனார், 9. ஆலத்தூர் கிழார், 11. ஆவூர்கிழார், 12. ஆவூர் மூலங்கிழார், 13. ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார், 14. ஆலம்பேரிச் சாத்தர், 15.நக்கண்ணையார், 16. இடைக்காடனார், 17. இடைக்குன்றூர்க் கிழார், 10. ஆலியார் 18. இரும்பிடர்த்தலையார், 19. ஈழத்துப் பூதன் தேவனார், 20. உலேச்சனார், 21. உறையூர் இளம்பொன் வாணிகனார், 22. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், 23. உறையூர் மருத்துவன் 28