பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுத்துவிட்டுப் பிரிந்து செல்பவர்கள் இவனைப் பிரிந்த காரணத்தினால் நமக்குப் பொருள் கிடைத்தது. ஆகவே நாம் அறிவுடையவர் என்று சொல்லிக்கொள்வார்களேயானால் அப்படி தம்மை அறிவுடையவர் என்று கூறிக் கொள்பவர்கள் அறிவுடையவராகவே இருக்கட்டும், நாம் மூடர்களாகவே இருப்போம். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். பொருளுக்காக அன்பையும் அருளையும் விட்டுப் பிரிகிறவன் தாங்கள் பெரிய கெட்டிக்காரன், புத்திசாலி என்று கருதிக் கொண்டால் அப்படிப்பட்டவன் புத்திசாலியாகவே இருக்கட்டும். நாம் பொருளுக்காக எந்த காரியத்தையும் செய்யாமல் மூடர்களாகவே நாம் இருப்போம் என்று கோப்பெருஞ் சோழன் அன்றைக்குப் பாடியிருக்கிறான். இது பொருளுக்காக மனைவியைப் பிரிந்து செல்கிற - ஒரு ஆணுக்கும் அவள் படுகின்ற கவலையின் காரணமாக பெண்ணுக்கும் பொருந்தும். இந்த மண்ணுக்கும் பொருந்தும் என்ற காரணத்தினாலேதான் இதை நான் குறிப்பிட்டேன். புதுமையான கருத்துக்களை பொதுவுடமைக் கருத்துக்களை எடுத்துச் சொன்ன புலவர்களும் இருந்திருக்கிறார்கள். பக்குடுக்கை நன்கணியார் என்பவர், அப்படிப்பட்டவர்களில் ஒருவர். உடுத்தியிருக்கின்ற உடையைக்கூட நன்றாக அணிய மாட்டார். அவ்வளவு எளிமையான கோலத்தில் உள்ளவர். அவர் கூறுகிறார்: "ஓரில் நெய்தல் கறங்க ஓர் இல் ஈர்ந்தண் முடிவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் - பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன் இன்னாது அம்ம, இவ்வுலகம் 36